
Manavai News
மணவாளக்குறிச்சி அருகே மனைவியை தாக்கிய தொழிலாளி கைது
மணவாளக்குறிச்சி அருகே மனைவியை தாக்கிய தொழிலாளி கைது
04-02-2015
மணவாளக்குறிச்சி போலீஸ் சரகம் அம்மாண்டிவிளை தெக்கூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 35). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சந்திரா (27). இவர்களுக்கு திருமணம் முடிந்து 8 வருடம் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். ராதாகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன், சந்திராவை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். மேலும், இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராதாகிருஷ்ணனை கைது செய்தனர்.
0 Comments: