
Manavai News
மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வில் சாதனை
மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வில் சாதனை
21-05-2015
மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேனிலைப்பள்ளி 2014-15 ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு தேர்வில் 157 மாணவ, மாணவிகள் எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இதேபோல் மேல்நிலை தேர்வில் 317 மாணவ, மாணவியர் எழுதியதிலும் அனைவரும் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
![]() |
மாணவிகள் அபிஷா, அதுல்யா, அக்ஷயா, சஜி |
மாணவி அபிஷா 497/500 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 3-ம் இடத்திலும், பள்ளியில் முதல் இடத்திலும் தேர்ச்சி பெற்றார். மாணவி பெற்ற மதிப்பெண் தமிழ்- 98, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100. மாணவிகள் அதுல்யா, அக்ஷயா, சஜி ஆகிய 3 பேரும் 495/500 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தனர்.
30 மாணவர்கள் அறிவியலிலும், 20 மாணவர்கள் சமூக அறிவியலிலும், 9 மாணவர்கள் கணிதத்திலும் 100/100 மதிப்பெண் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் நசரேத் சார்லஸ், தலைமையாசிரியரும், நல்லாசிரியருமான ஜாண் கிறிஸ்டோபர், நிர்வாக அலுவலர் ஜாண்சன், ஆசிரிய மன்ற செயலாளர் ராஜேந்திரன், ஜெயலெட்சுமி மற்றும் ஆசிரிய பெருமக்கள், அலுவலக பணியாளர்கள் பாராட்டினர்.
0 Comments: