District News
இனயம் வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
இனயம் வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக கிறிஸ்தவ பேரவை சார்பில் தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பேரவையின் உயர் மட்டக்குழு ஆலோசகர் ஜார்ஜ் பொன்னையா தலைமை தாங்கினார்.
பெந்தகொஸ்தே கூட்டமைப்பு தலைவர் தேவசுந்தரம், பேரவை தலைவர் ஏசுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., வர்த்தக துறைமுக எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜேசையா, ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரமேஷ்பாபு, நகர செயலாளர் மணி, நகர காங்கிரஸ் செயலாளர் லிபோரியஸ் மற்றும் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.
0 Comments: