.jpg)
மணவை செய்திகள்
மணவாளக்குறிச்சி - சின்னவிளையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 6½ பவுன் நகை கொள்ளை
மணவாளக்குறிச்சி - சின்னவிளையில்
வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 6½ பவுன் நகை கொள்ளை
கொள்ளையனுக்கு போலீஸ் வலைவீச்சு
24-11-2012
மணவாளக்குறிச்சி அருகே உள்ள சின்னவிளை பகுதியில் இன்று அதிகாலை தூங்கி கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 6½ பவுன் தாலியை பறித்து சென்றான். இது பற்றிய விபரம் வருமாறு,
மணவாளக்குறிச்சி சின்னவிளை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி குரூஸ். இவருடைய மனைவி ஆப்லின் (வயது 37). இவர் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் யாரோ ஒரு மர்ம நபர் வீட்டின் கதவை திருட்டுத்தனமாக திறப்பதை உணர்ந்தார். சற்று நேரத்தில் ஆப்லின் கழுத்தில் கிடந்த 6½ பவுன் தாலியை பறித்து கொண்டு ஓடினார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ஆப்லின், உடனே திருடன் திருடன் என சத்தம் போட்டார். இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து திருடனை படிக்க முற்பட்டனர். ஆனால் அதற்குள் திருடன் இருட்டில் ஓடி மறைந்து விட்டான்.
இதுகுறித்து ஆப்லின் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையனை வலைவீசி தேடிவருகின்றனர்.
மணவாளக்குறிச்சி ஆற்றின்கரை பகுதியில் நேற்று நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் தாலி செயினை பறித்த சம்பவ பரபரப்பு அடங்குவதற்குள், இன்று ஒரு செயின் பறிப்பு சம்பவம் மணவாளக்குறிச்சி பகுதி பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments: