
District News
நாகர்கோவிலில் சுரபி கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளையின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது
நாகர்கோவிலில் சுரபி கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளையின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது
25-01-2014
நாகர்கோவில் மேப்பமூடு சந்திப்பு அருகில் உள்ள பார்வதி ரெசிடென்சியில் “சுரபி கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளையின்” நிர்வாகிகள் கூட்டம் 24-ம் தேதி அன்று மாலை 5 மணி அளவில் நடந்தது.
நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் மக்கள் தொடர்பு அதிகாரி ஜார்ஜ் வரவேற்று பேசினார். செயலாளர் நவமணி குமார் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்தார். அறக்கட்டளையின் நிர்வாக அதிகாரியும், தலைவருமான செல்வராஜ் தலைமையுரை வழங்கி அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.
தமிழ்நாடு மீனவ மகளீர் அணி தலைவி லீமாரோஸ் மற்றும் அறக்கட்டளை பொருளாளர் ஜெசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் வெற்றிவேல் சிறப்புரையாற்றினார். பாலசுப்பிரமணியம் நன்றியுரை வழங்கினார்.
அறக்கட்டளையின் நிர்வாகிகளாக செல்வராஜ்(தலைவர்), குமார் (செயலாளர்), ஜெசி(பொருளாளர்), சட்டஆலோசகர் வெற்றிவேல், ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ், கௌரவ ஆலோசகர் லீமா ரோஸ் மற்றும் முக்கிய அங்கத்தினராக லலிதா, நெல்சன், ஜெயராணி, சகாய நிர்மலா, ராஜகோபால், மணவை எம்மெஸ் சலீம், மேரி கமலாபாய், இனோஸ், சனாதனன், காசி விஸ்வநாதன், மணவை முருகன், பாலசுப்பிரமணியன், விஜய குமாரி, ராஜசேகர் ஜஸ்டின் அமிர்தராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் சன் ரேஸ் மார்க்கெட்டிங் நிறுவன அதிகாரிகள் சதீஷ், சுரேஷ், போர்முரசு பத்திரிகையாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
very thanks for uploading the process
ReplyDelete