
Surrounded Area
வெள்ளிச்சந்தை அருகே வீடு புகுந்து பெண் மீது தாக்குதல்
வெள்ளிச்சந்தை அருகேயுள்ள சாந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் உமாசங்கர். இவரது மனைவி பிரபா(28). இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று மயிலாடியை சேர்ந்த தங்கமுத்து(63), அவரது மனைவி ராஜகனி ஆகியோர் உமாசங்கர் வீட்டில் அத்துமீறி நுழைந்து தகராறு செய்துள்ளனர்.
இதை தட்டி கேட்ட பிரபாவை தங்கமுத்து தாக்கியுள்ளார். படுகாயமடைந்த பிரபா ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கமுத்துவை கைது செய்தனர்.
0 Comments: