சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு பேரூராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு
மண்டைக்காடு பேரூராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு
02-02-2015
கொசுக்கள் மூலம் பரவும் மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா மற்றும் மூளைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து மண்டைக்காடு பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு லெட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நடைபெற்றது. கருத்தரங்கில் வீட்டின் சுற்றுப்புறங்களை எவ்வாறு வைத்துக் கொள்ளவேண்டும், குடிநீரை சேமித்து வைக்கும் பாத்திரங்களை பாதுகாப்பது எப்படி, நோயின் அறிகுறி போன்றவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டேவிட் ராஜகோபால் தலைமை தாங்கினார். மண்டைக்காடு பேரூராட்சி செயல்அலுவலர் ஜெயராஜ், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூர்ரி பேராசிரியர் டாக்டர் ஜெயலால், டாக்டர் பாரத், மருத்துவ ஆய்வாளர்கள் சுப்பிரமணியம், ராம்குமார், கல்லூரி சுகாதார இயக்கத்தினர் மற்றும் விலங்கியல்துறை மாணவ, மாணவியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments: