
சுற்றுவட்டார செய்திகள்
குளச்சல் புனித சூசையப்பர் ஆலய ஏழை குடில் திட்டத்தில் வீடு வழங்கப்பட்டது
குளச்சல் புனித சூசையப்பர் ஆலய ஏழை குடில் திட்டத்தில் வீடு வழங்கப்பட்டது
15-02-2016
குளச்சல் களிமார் பகுதியில் உள்ள புனித சூசையப்பர் ஆலய ஏழை குடில் திட்டத்தின் கீழ் ஒரு ஏழை விதவை குடும்பத்திற்கு இலவசமாக வீடு கட்டி கொடுக்கப்பட்டது. அந்த வீடு அர்ச்சிக்கப்பட்டு பயனாளிக்கு வழங்கப்பட்டது.
வீடு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கு தந்தை அருட்பணி கிளாட்ஸ்டன், வட்டார முதன்மை குரு அருட்பணி உபால்டு மற்றும் இத்திட்டத்திற்கு கணிசமான நிதி உதவி செய்த அருட்பணி ஜெரோமியாஸ், பங்கு மக்கள், பங்கு பேரவையினர் உள்பட பலர் பங்கேற்றனர். இத்திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு ஒரு ஏழைக்கு வீடு வழங்கப்படுகிறது.
செய்தி மற்றும் போட்டோஸ்
மணவை பி.எஸ்.கே.
0 Comments: