
Manavai News
மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணத்தில் தூண்டில் வளைவு அடிக்கல் நாட்டு விழா
மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணத்தில் தூண்டில் வளைவு அடிக்கல் நாட்டு விழா
10-02-2016
மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணத்தில் அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றத்தால் மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே, இங்கு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து, தமிழக அரசு தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ. 15 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைக்க ஆணை பிறப்பித்தது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடியப்பட்டணத்தில் நடந்தது.
பங்குபேரவை துணைத்தலைவர் ஜோசப்சுந்தர் வரவேற்று பேசினார். நசரேத் சார்லஸ் தலைமை தாங்கினார். கோட்டார் மறைமாவட்ட ஆயர் அடிக்கல்லை அர்ச்சித்து வைத்து பேசினார். நிகழ்ச்சியில், துறைமுகபிரிவு செயற்பொறியாளர் ஆசைத்தம்பி, எம்.எல்.ஏ.க்கள் பச்சைமால், பிரின்ஸ், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், அருட்பணியாளர்கள் மரியசூசை, அல்காந்தர், செல்வராஜ், மீன்வளத்துறை உதவி இயக்குனர் நாபிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லீமா ஹெட்சி அமலின், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய தலைவர் உதயம் உள்பட பலர் வாழ்த்தி பேசினர். முடிவில் பேரவை செயலாளர் கார்மேலியன் நன்றி கூறினார்.
0 Comments: