
சுற்றுவட்டார செய்திகள்
ஹைந்தவ இந்து சேவா சங்க கூட்டம் நடைபெற்றது
ஹைந்தவ இந்து சேவா சங்க கூட்டம் நடைபெற்றது
02-02-2015
ஹைந்தவ இந்து சேவா சங்க கூட்டம் இராதாகிருஷ்ணபுரம் சங்க அலுவலகத்தில் வைத்து தலைவர் கந்தப்பன் தலைமையில் நடந்தது. பொதுசெயலாளர் ரெத்தினபாண்டியன், செயலாளர் முருகன், பொருளாளர் சசீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் துணைத்தலைவர் பத்மநாபபிள்ளை, ஆனந்தராஜ், ஸ்ரீபத்மநாபன், இணை செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், வேலாயுத விமலகுமார், செயற்குழு உறுப்பினர்கள் பத்மதாஸ், திரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசித் திருவிழாவில் 10 நாட்கள் நடக்கும் சமயமாநாட்டிற்கு மத்திய, மாநில அமைச்சர்கள். துறவியர்கள் அழைப்பது என்றும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிதியில் இருந்து ரூபாய் பத்து இலட்சம் செலவில் சமயமாநாட்டு அரங்கும் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ததற்கு நன்றி தெரிவித்தும், இதை கட்ட இந்து அறநிலையத்துறை அனுமதி வழங்க கேட்டும், சிவராத்திரியன்று உள்ளூர் விடுமுறை வழங்க கேட்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
0 Comments: