
Manavai News
மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் காவடி பவனி
மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் காவடி பவனி
25-05-2015
மணவாளக்குறிச்சியில் யானை வரவழைத்த பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் காலையில் பறக்கும் காவடி, வேல் காவடி, புஷ்பக்காவடி ஆகிய காவடிகள் ஊர்வலம் நடந்தது. மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவில்களுக்கு காவடிகள் ஊர்வலமாக சென்றது. இதனையொட்டி அந்த கோவில்களில் சிறப்பு தீபாராதனை நடந்தது.
பிறகு பறக்கும் காவடி, வேல் காவடி, புஷ்பக்காவடி ஆகியவை மணவாளக்குறிச்சி சந்திப்பு அம்மாண்டிவிளை, வெள்ளமடி, ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூருக்கு சென்றது.
0 Comments: