
Announcements
மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மரணம்
மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மரணம்
01-03-2015
மணவாளக்குறிச்சி பாலம் அருகே வசித்து வந்தவர் கிருஷ்ணன் என்ற கிட்டு (வயது 40). இவர் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வந்தார். மேலும் மணவாளக்குறிச்சி ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோவும் ஓட்டி வந்தார்.
கிட்டு கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்தார். அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிட்டு இன்று (01-03-2015) அதிகாலை மரணம் அடைந்தார். கிட்டு மரணம் அடைந்ததை தொடர்ந்து இன்று மணவாளக்குறிச்சியில் ஆட்டோக்கள் ஓடவில்லை. ஆட்டோ ஓட்டுனர்கள் துக்கம் அனுசரித்து வருகின்றனர்.
இன்று மாலை அவருடைய உடல் அடக்கம் செய்யப்படுகிறது. அவருடைய உடலுக்கு குடும்பத்தார்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
0 Comments: