
Announcements
மணவாளக்குறிச்சி, சின்னவிளையை சேர்ந்த கல்லூரி மாணவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் சாவு
மணவாளக்குறிச்சி, சின்னவிளையை சேர்ந்த கல்லூரி மாணவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் சாவு
06-03-2015
மணவாளக்குறிச்சி, சின்னவிளை பகுதியை சேர்ந்தவர் அத்தனாஸ். இவரது மகன் அருள் பிரஜின் (வயது 18). இவர் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். அருள் பிரஜின் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் வீட்டில் இருந்து நாகர்கோவிலுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது தோப்பூரை அடுத்த பாம்பன்விளை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த வாகனத்தில் மோதி, தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக கூறப்படுகிறது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அருள் பிரஜின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, இன்று மதிய வேளையில் கொண்டு வரப்பட்டது.
அருள் பிரஜின் உடல் இன்று மாலை 4 மணி அளவில் சின்னவிளை ஊர் கல்லறை தோட்டத்தில் வைத்து நல்லடக்கம் செய்யப்படுகிறது. அருள் பிரஜின் இறந்த செய்தி அறிந்து அவர் படித்த கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவரது நண்பர்கள், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

0 Comments: