
சுற்றுவட்டார செய்திகள்
முட்டம் அருகே படகில் இருந்து தவறி விழுந்து கடலில் தத்தளித்த மீனவர் மீட்பு
முட்டம் அருகே படகில் இருந்து தவறி விழுந்து கடலில் தத்தளித்த மீனவர் மீட்பு
11-04-2015
குளச்சலில் இருந்து விசைப்படகு மூலம் ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க 11 மீனவர்கள் சென்றனர். அந்த படகில் திருவனந்தபுரம் மன்னாகுளம் அஞ்சு தங்கு என்ற இடத்தைச் சேர்ந்த மரியதாசன் (வயது 67) என்ற மீனவரும் சென்றார்.
அவர்கள் படகு முட்டத்தில் இருந்து 15 நாட்டிங்கல் கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மரியதாசன் தவறி கடலில் விழுந்து விட்டார். அந்த படகில் இருந்தவர்கள் அதை கவனிக்காமல் சென்று விட்டனர்.
இதனால் மீனவர் மரியதாசன் உயிரை காப்பாற்றிக் கொள்ள கடலில் நீந்தியபடி தத்தளித்தார். சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு அந்த வழியாக முட்டத்தை சேர்ந்த விசைப்படகில் ஜான், ஆண்டனி, ரூபன் உள்பட 4 மீனவர்கள் வந்தனர். அவர்கள் கடலில் தத்தளித்த மரியதாசனை காப்பாற்றி தங்கள் படகில் ஏற்றிக் கொண்டு கரைக்கு வந்தனர். அவருக்கு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன் பிறகு இந்த தகவல் முட்டம் பங்கு தந்தைக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் குளச்சல் கடலோர பாதுகாப்புப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய ஜோசுக்கு தகவல் கொடுத்தார். அவர், அங்கு சென்று மீனவர் மரியதாசனை அழைத்துச் சென்றார்
0 Comments: