
Events
மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் இருந்து மண்டைக்காட்டிற்கு யானை மீது களப ஊர்வலம்
மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் இருந்து மண்டைக்காட்டிற்கு யானை மீது களப ஊர்வலம்
06-03-2015
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் 5-ம் நாள் திருவிழாவான நேற்று மாலை 3 மணிக்கு மணவாளக்குறிச்சி, பேச்சி விளாகம் அருள்மிகு இசக்கியம்மன் கோவிலில் இருந்து சந்தனக் குடங்களுடன் யானை மீது களபம், தேர்மாலையுடன் அலங்கார ஊர்தியில் ஊர்வலம் மண்டைக்காடு வந்தது.
மாநாட்டு பந்தத்தில் காலை 8 மணிக்கு பக்தி பஜனையும், மதியம் 12 மணிக்கு சமய மாநாடும், பிற்பகல் 2.30 மணிக்கு கேரளா, செங்கல் ராதாகிருஷ்ணனின் ஹரிநாம கீர்த்தனம் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு கர்நாடக இன்னிசையும் நடைபெற்றது.

இரவு 8 மணிக்கு சமய மாநாடும், இரவு 10.30 மணிக்கு தக்கலை அபிநயா கலைக்குழு வழங்கிய நாட்டிய நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு 2 மணிக்கு பக்தி திரைப்படம் காண்பிக்கப்பட்டது. 5-ம் நாள் நிகழ்ச்சிகள் அனைத்தையும் மணவாளக்குறிச்சி மணல் ஆலை பணியாளர்கள் செய்திருந்தனர்.
0 Comments: