மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில்
கொடைவிழா சிறப்பு காட்சிகள்
26-02-2012
குமரி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் திருவிழா வருகிற மார்ச் மாதம் 4 -ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. கோவிலின் திருவிழா முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து 25-02-2012 அன்று மாவட்ட கலெக்டர் நாகராஜன், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், கோட்டாட்சியாளர் மோகனசந்திரன், ஆர்.ஐ. ஜூலியன், பேரூராட்சி உதவி இயக்குநர் இராதாகிருஷ்ணன், மண்டைக்காடு பேரூராட்சி தலைவி மகேஸ்வரி, துணை தலைவர் ஜெகன் சந்திரகுமார், உறுப்பினர்கள் ஜெயசேகரன், கமலா, செயல் அலுவலர் ஆறுமுக நயினார், அலுவலக உதவியாளர் சுவாமி, மிசா சோமன் ஆகியோர் கலந்து கொண்டு மேற்கொண்டனர்.
|
மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு மண்டைக்காடு
பகவதியம்மன் கோவில் கடற்கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட காட்சி |
|
கடற்கரையில் பக்தர்கள் |
|
கோவில் முன்பகுதியில் பந்தல் மற்றும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது |
கேரளா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து பக்தர்கள் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக கேரள பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. பெண்கள் பொங்கல் இட்டு வழிபடுகின்றனர். கேரள டூரிஸ்ட் வாகனங்கள் அதிகளவில் காணப்படுகிறது. திருவிழா துவங்க ஒரு வாரமே இருக்கும் நிலையில் ஏராளமான கடைகள் கட்டப்பட்டு, வியாபாரமும் படுஜோராக நடைபெறுகிறது.
|
கேரள பெண் பக்தர்கள் பொங்கலிடும் காட்சி |
|
தமிழக பெண் பக்தர்கள் பொங்கலிடும் காட்சி |
|
திருவிழா கடைகள் அமைக்கும் பணி |
|
கேரள வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன |
|
மிட்டாய் கடையில் வியாபாரம் இப்போதே நடைபெறும் காட்சி |
|
கோவிலின் கிழக்கு பகுதி |
0 Comments: