Events
பள்ளியாடி, பழையப்பள்ளி அப்பா திருத்தலம் மாபெரும் சமபந்தி விருந்து அழைப்பு
பள்ளியாடி, பழையப்பள்ளி அப்பா திருத்தலம்
மாபெரும் சமபந்தி விருந்து அழைப்பு
17-03-2012
பள்ளியாடி - பழையபள்ளி அப்பா திருத்தலம் |
சமபந்தி விருந்து அழைப்பிற்கான சுவரொட்டி |
இலட்சக்கணக்கான மக்கள் மதம், இன, மொழி வேறுபாடின்றி தரும் காணிக்கை பொருட்களை சேர்த்து சமைத்து இங்கு வரும் பொதுமக்களுக்கு சமபந்தி விருந்தாக சிறப்புடன் வழங்கப்படுகிறது. புனித இடமான இத்திருத்தலம் கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகா, வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பள்ளியாடி பகுதியில் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழக்கமுடைய மிகப்பெரிய புளிய மரத்தின் கீழ் இத்திருத்தலம் அமைந்துள்ளது சிறப்பாகும்.
சர்வமத பிரார்த்தனை 18-03-2012 ஞாயிறு அன்று மாலை 3 மணி முதல் நடைபெறுகிறது.
சமபந்தி விருந்து 19-03-2012 திங்கட்கிழமை அன்று காலை 10 மணி முதல் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற இருக்கிறது. அனைத்து பொதுமக்களும் சமபந்தி விருந்தில் கலந்து கொள்ளுமாறும், பழையபள்ளி அப்பாவின் அருள்பெற்று செல்லுமாறும் அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.
பள்ளியாடி பழையபள்ளி திருத்தல
சமபந்தி விருந்து விழாவுக்கு
சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும்
விழா கமிட்டி வலியுறுத்தல்
17-03-2012
பள்ளியாடி பழைய பள்ளி சமபந்தி விருந்து விழாவிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என விழா கமிட்டி தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பழைய பள்ளி விழா கமிட்டி தலைவர் மா.ஜெயச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பள்ளியாடியில் உள்ள பழைய பள்ளி திருத்தலம் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இங்குள்ள மரத்தடி நிழலில் எரியும் கல்விளக்கு எண்ணெய் தீப ஒளியையே மக்கள் பிரதான வணக்கத்திற்குரிய அடிப்படை குறிக்கோளாக கொண்டு வழிபட்டு வருகின்றனர். எம்மதத்தினரும் சம்மதம் எனும் உயரிய குறிக்கோளுடன் அவரவர் மத அடிப்படையில் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.
பழையபள்ளி திருத்தலத்தில் 19-03-2012 அன்று அனைத்து மத மக்களும் பங்கேற்கும் சமபந்தி வருந்து நடக்கிறது. முன்னதாக 18-03-2012 அன்று அனைத்து மத பிரார்த்தனை நடக்கிறது. சமபந்தி விருந்தில் குமரி மாவட்டத்தில் அனைத்து இடங்களில் இருந்து மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டு 1.5 லட்சம் பக்தர்கள் சமபந்தி விருந்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல் கே. சுரேஷ் |
0 Comments: