Events
கல்லடிவிளை, ஸ்ரீ ஆற்றுமாடன் தம்புரான் கோவில் சித்திரை திருவிழா 2-ம் நாள் விழா நிகழ்ச்சிகள்
கல்லடிவிளை, ஸ்ரீ ஆற்றுமாடன் தம்புரான் கோவில்
சித்திரை திருவிழா 2-ம் நாள் விழா நிகழ்ச்சிகள்
10-05-2012
கல்லடிவிளை, ஸ்ரீ ஆற்றுமாடன் தம்புரான் கோவில் சித்திரை திருவிழா 2-ம் நாள் விழா சித்திரை மாதம் 27-ம் தேதி (02-05-2012) நடைபெற்றது. காலை 4.30 மணிக்கு சுப்ரபாதம் நிகழ்ச்சியும், 5 மணிக்கு பக்தி கானங்களும், 6.30 மணிக்கு தீபாராதனையும், 7.30 மணிக்கு பக்தி கான நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கு சிறுவர், சிறுமியரின் விளையாட்டு போட்டிகள் நடந்தன. விளையாட்டு போட்டிகளுக்கு செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.அனீஷ் மற்றும் பி.விஷால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும், தொடர்ந்துய் 7 மணிக்கு மாவட்ட அளவிலான மாபெரும் இறுதி மின்னொளி கைபந்து போட்டியும் நடைபெற்றது.
சாலையில் வைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவுகள் |
ஸ்ரீ ஆற்றுமாடன் தம்புரான் கோவில் |
கோவில் வேலையில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் |
ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் |
ஸ்ரீமன் நாராயண சாமி |
பத்ரகாளி அம்மன் |
இரவு நேரத்தில் ஜொலித்த அலங்கார விளக்குகள் |
கைப்பந்து போட்டியில் கலந்து கொண்ட அணிகள்
திவண்டா கோட்டை, காட்டுவிளை, படர்நிலம், NSC பூதப்பாண்டி, KMC புதுக்குடியிருப்பு, மாவிளை, அழகன்விளை, KKFC நாகர்கோவில், ஆலன்விளை, மூலச்சல், AWD.HS.கணபதிபுரம், நாஞ்சில் கிளப், லாயம் லிம்ரா, Friend Club கன்னங்காடு , NGL Friends கன்னியாகுமரி, சுண்டபற்றிவிளை, Friends Club மார்த்தாண்டம், ஆற்றின்கரை காலனி, Sea Bird முள்ளூர்துறை, இனையம் வாரியர்ஸ் போன்ற அணிகள் கைபந்து போட்டியில் பங்கு பெற்றன.
கைப்பந்து போட்டி மைதானம் |
பரிசுகள் வைக்கப்பட்டுள்ள காட்சி |
இரவு நேரத்தில் ஜொலிக்கும் மைதானம் |
இளைஞர்களால் வைக்கப்பட்டுள்ள பேனர் |
போட்டியை தொகுத்து வழங்கியவர்கள் |
போட்டியாளர்கள் அறிமுக காட்சி |
போட்டி நடைபெற்ற காட்சி |
கைபந்து போட்டி வீடியோ காட்சி
இந்த அணிகளில் அரை இறுதியில் காட்டுவிளை, KKFC நாகர்கோவில், NGL கன்னியாகுமரி, இனையம் வாரியர்ஸ் போன்ற அணிகள் விளையாடின. இதில் இறுதி போட்டியில் KKFC நாகர்கோவில், NGL கன்னியாகுமரி ஆகிய அணிகள் விளையாடின. போட்டி முடிவில் KKFC நாகர்கோவில் முதல் பரிசையும், NGL கன்னியாகுமரி அணி இரண்டாம் பரிசையும், இனையம் வாரியர்ஸ் அணி மூன்றாம் பரிசையும், காட்டுவிளை அணி நான்காம் பரிசையும் பெற்றன.
பரிசு விபரங்கள்
முதல் பரிசு:
2501 ரூபாயும் (உபயம்- வசந்தா முருகேசன், வெள்ளிமலை பேரூராட்சி தலைவர்), ஷாலினி நினைவு சுழற்கோப்பையும் (உபயம்-குட்டன் வல்சலா, சிவந்தமண்)
இரண்டாம் பரிசு:
2001 ரூபாயும் (உபயம்- S.அனி, சதர்ன் ரெயில்வே, கல்லடிவிளை), மணி நினைவு கோப்பையும், (உபயம்- G.P.மணி, நாகர்கோவில், R.முருகேசன், சிவந்தமண்)
மூன்றாம் பரிசு:
1501 ரூபாயும் (உபயம்- T.இராதாகிருஷ்ணன், B.S.F., பம்மத்துமூலை) R.S.வனிதா நினைவு கோப்பையும் (உபயம்- R.வைகுண்டமணி, வடக்கன்பாகம்)
நான்காம் பரிசு:
1001 ரூபாயும் (உபயம்- NSV.பிரசாத் நமஸ்தே, கூட்டுமங்கலம்) அஸ்வதி நினைவு கோப்பையும் (உபயம்- G.P.மணி, நாகர்கோவில், R.முருகேசன், சிவந்தமண்)
This comment has been removed by a blog administrator.
ReplyDelete