Events
மணவாளக்குறிச்சியில் சமையல் தொழிலாளர்கள் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
மணவாளக்குறிச்சியில்
சமையல் தொழிலாளர்கள்
சார்பில்
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
12-08-2012
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்கள் தற்போது
ரம்சான் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். இதன்படி தினமும் அதிகாலை முதல் மாலை 6.30 மணி வரை நோன்பு இருப்பார்கள். மாலையில் நோன்பு
திறந்து உணவருந்துவார். இதன்படி மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள
பாப்புலர் திருமண மண்டபத்தில் வைத்து ‘மணவாளக்குறிச்சி சமையல் தொழிலாளர்கள்
சார்பாக’ இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
மணவாளக்குறிச்சி சமையல் கலைஞர்கள் |
இந்நிகழ்ச்சிக்கு சமையல் தொழிலாளர்கள் சார்பாக
ஏ.செய்யதுஅலி தலைமை தாங்கினார். ஏ. ஷேக் முஹம்மது (சூடு) முன்னிலை வகித்தார்.
இப்தார் விருந்து நிகழ்ச்சியில் வடசேரி இமாம். கபீர் ஆலிம், பெருவிளை சமூக சேவகர்
அஸன் ஹாஜியார் மற்றும் குமரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு தலைவர் அப்துல்
ஹக்கீம் ஆகியோர் ரம்சான் பற்றிய சிறப்புரை வழங்கினர். மேலும் மணவாளக்குறிச்சி
முஸ்லிம் முஹல்ல பள்ளிவாசல் இமாம்கள் அன்சாரி மற்றும் ஜலீல் ஆகியோர் சிறப்பு
அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
குமரி மாவட்ட குழந்தைகள் நலத்தலைவர் அப்துல் ஹக்கீம் பேசிய காட்சி |
வடசேரி பள்ளிவாசல் இமாம் கபீர் பேசிய காட்சி |
பெருவிளை சமூக சேவகர் ஹசன் பேசிய காட்சி |
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில்
அறுசுவையுடன் கூடிய உணவு பரிமாறப்பட்டது. பெரும்திரளான மக்கள் இந்த இப்தார்
விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முடிவில் மணவாளக்குறிச்சி சமையல்
தொழிலாளர்கள் சார்பாக எம்.ஹெச். ஷேக் சுலைமான் நன்றி கூறினார். மணவாளக்குறிச்சி
சமையல் தொழிலாளர்கள் அமைப்பில் உள்ள சுமார் 30 பேர் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
இப்தார் விருந்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது |
முஹல்ல இளைஞர்கள் |
இப்தார் விருந்தில் கலந்துகொண்டு உணவருந்தும் காட்சி |
மணவாளக்குறிச்சி சமையல் கலைஞர்களின் வீடியோ காட்சி
முஸ்லிம் ஜமாஅத் பள்ளிவாசலில்
ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
29-07-2012
உலகமெங்கும் வாழும் இஸ்லாமிய மக்களின் இந்த 2012 ஆண்டுக்கான ரம்சான் நோன்பு கடைபிடிக்கும் மாதம்
ஜூலை 21-ம் தேதி (ஹிஜ்ரி ஆண்டு 1433 ரமலான் 1) சனிக்கிழமை அன்று முதல் தொடங்கியது.
இஸ்லாமியர்களால் ரம்சான் நோன்பு 30 நாள்கள் கடைபிடிக்கப்படுகிறது. தினமும் அதிகாலை முதல் மாலை
சுமார் 6.30 மணி வரை எந்த உணவும் உட்கொள்ளாமல் இறைவனை வேண்டி நோன்பு
நோற்கின்றனர்.
அதன்படி, குமரி மாவட்டத்தில் உள்ள
மணவாளக்குறிச்சி பேரூராட்சி மைய பகுதியில் அமைந்துள்ள மணவாளக்குறிச்சி முஸ்லிம்
ஜமாஅத் பள்ளிவாசலில் நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சியின் காட்சிகளையும்,
தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் பள்ளிவாசலின் காட்சிகளையும் இந்த
பகுதியில் காணலாம்.
மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல பள்ளிவாசலின்
புதிய தோற்றம்
புதிய தோற்றத்துடன் பள்ளிவாசல் |
பள்ளிவாசலி நுழைவாயில் |
புதிதாக கட்டப்பட்டுள்ள ஹவ்து |
பள்ளிவாசல் வலது பக்க விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது |
பள்ளிவாசல் முன்பக்க தரைதளம் அலங்கார ஓடுகளால் சீரமைக்கப்பட்டுள்ளது |
பள்ளிவாசலில் நடைபெற்ற நோன்பு திறக்கும் காட்சிகள்
நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இஸ்லாமிய பெருமக்கள் |
நோன்பு திறக்கப்படும் வீடியோ காட்சி
நோன்பு திறந்து உணவருந்தும் வீடியோ காட்சி
0 Comments: