
சுற்றுவட்டார செய்திகள்
மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள்-ஆட்டோ மோதல்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்
மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள்-ஆட்டோ மோதல்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்
06-03-2015
நாகர்கோவில் நேசமணி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மரிய அற்புதராஜன் (வயது 58). அவர் நேற்று முன்தினம் நாகர்கோவிலில் இருந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பாதுகாப்பு பணிக்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது பரப்பற்று அருகே வந்த போது, எதிரே வந்த ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மரிய அற்புதராஜன் படுகாயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் ஆட்டோ டிரைவர் ராஜன் (40) என்பவர் மீது மணவாளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

0 Comments: