
சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காட்டில் பேரூராட்சி தலைவி– கவுன்சிலர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்
மண்டைக்காட்டில் பேரூராட்சி தலைவி– கவுன்சிலர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்
06-03-2015
மண்டைக்காடு பேரூராட்சி தலைவி மகேஸ்வரி முருகேசன் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., பாரதீய ஜனதாவை சேர்ந்த 14 கவுன்சிலர்கள் நேற்று பகல் 1 மணி அளவில் திடீர் உள்ளிருப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் தினமும் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். கேரள பெண் பக்தர்கள் அதிக அளவில் இருமுடி கட்டி வருகை தருகிறார்கள்.

இந்நிலையில் இந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் புதிதாக கோவிலுக்கு செல்ல ஒரு வழிபாதை திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக கோவிலக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்லும் பக்தர்கள் கடற்கரைக்கு செல்ல தோப்பு வழியாக சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதை உடனே ரத்து செய்து வழக்கம் போல பக்தர்கள் கோவிலுக்கு வந்த செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தேவசம் போர்டு பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கூறி இந்த போராட்டம் நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
0 Comments: