
சுற்றுவட்டார செய்திகள்
மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: ஆஸ்பத்திரி ஊழியர் சாவு
மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: ஆஸ்பத்திரி ஊழியர் சாவு
05-03-2015
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள காஞ்சிரவிளையை சேர்ந்தவர் தவசி. இவரது மகன் அய்யப்பன் (வயது 29). இவர் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சுமார் 7.30 மணி அளவில் வேலைக்கு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கட்டைக்காடு பகுதியில் செல்லும் போது, முட்டத்தை சேர்ந்த மில்டன் (24) என்பவர் எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். திடீர் என்று 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக 2 பேரையும் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அய்யப்பனை தீவிர சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அய்யப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

0 Comments: