
Events
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் 4-ம் நாள் திருவிழா நிகழ்வுகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் 4-ம் நாள் திருவிழா நிகழ்வுகள்
04-03-2015
மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் 4-ம் நாள் திருவிழா நிகழ்ச்சியில் காலை 4.30 மணிக்கு திருக்கோவில் நடைதிறக்கப்பட்டது. காலை 6.30 மணிக்கு தீபாராதனையும், காலை 9.30 மணிக்கு வெள்ளி பல்லக்கில் அம்மன் பவனி வருதலும், பகல் 1 மணிக்கு உச்சி கால பூஜையும் நடைபெற்றது.
மாலை 3 மணிக்கு மேற்கு நெய்யூர் ஊரம்மன் கோவிலில் இருந்து சந்தன குடத்துடன் யானை ஊர்வலம் உடையார்விளை, லெட்சுமிபுரம் வழியாக மண்டைக்காடு கோவிலை வந்தடைந்தது. இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நடைபெற்றது.
சமய மாநாட்டு பந்தலில் காலை 8 மணிக்கு கொக்கோடு ஜெய் ஸ்ரீராம் ஆஞ்சநேயர் பாடகற்குழுவினரின் பஜனையும், காலை 10 மணிக்கு மகாபாரதம் தொடர் விளக்க உரையும், பகல் 12 மணிக்கு சமய மாநாடும், பிற்பகல் 3.30 மணிக்கு கன்னியாகுமரி மாவட்ட கம்பன் கழகம் வழங்கிய இராமாயண சொல்லரங்கம் நிகழ்வும், மாலை 5 மணிக்கு திருவனந்தபுரம் வைக்கம் பத்மா கிருஷ்ணன் மற்றும் குழுவினரின் வயலின் இன்னிசை கச்சேரியும், மாலை 6.30 மணிக்கு ஆன்மிக உரையும், இரவு 11 மணிக்கு தக்கலை சிவாவின் பக்தி மெல்லிசை விருந்து நிகழ்ச்சியும் நடைபெற்றது.
Photos
“Puthiya Puyal” Murugan
Manavalakurichi
0 Comments: