Events
மணவாளக்குறிச்சி ஜும்ஆ பள்ளிவாசல் விரிவாக்கப் பகுதி திறப்பு விழா
மணவாளக்குறிச்சி ஜும்ஆ பள்ளிவாசல்
விரிவாக்கப் பகுதி திறப்பு விழா
18-08-2012
மணவாளக்குறிச்சி முஸ்லிம் சமுதாய ஜும்ஆ பள்ளிவாசலின் விரிவாக்கப் பனி மர்ஹூம் அல்ஹாஜ்.எஸ்.எம். அப்துல் மஜீது குடும்பத்தார் முழு செலவில் கட்டி முடிக்கப்பட்டு, இறைவனுக்காக 17-08-2012 அன்று வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி அளவில் வக்பு செய்யப்பட்டது.
புதிய விரிவாக்கப் பகுதியில், எல்லா செலவுகளையும் ஏற்றுக்கொண்ட மர்ஹூம். அல்ஹாஜி எஸ்.எம். அப்துல் மஜீது அவர்களின் மருமகன் ஜனாப்.ஷாபி அவர்களும், ஜும்ஆ பள்ளிவாசல் இமாம்.மௌலவி.ஜலீல் உஸ்மானி அவர்கள் மற்றும் முஹல்ல தலைவர், நிர்வாகிகள் , ஊர் சமுதாய பொதுமக்கள் முன்னிலையில் ரிப்பன் வெட்டப்பட்டு, புது பகுதியை திறந்து வைத்தார்கள். கலந்து கொண்டவர்கள் அனைவரும் புதிய விரிவாக்கப்பகுதியில் தொழுகை நடத்தினார்கள்.
விரிவாக்கப்பட்டுள்ள பகுதிக்கு முழுநன்கொடை வழங்கிய மர்ஹூம் அப்துல் மஜீது அவர்களது மருமகன் ஷாபி அவர்களுக்கு பொன்னாடை போர்த்திய ஜமாஅத் தலைவர் எம்.பஷீர் அவர்கள் |
கட்டிட ஒப்பந்தகாரருக்கு உபசெயலாளர் நூருல் அமீன் பொன்னாடை போர்த்திய காட்சி |
விரிவாக்கப்பட்ட புதிய பகுதியை மணவாளக்குறிச்சி பள்ளிவாசல் இமாம். மௌலவி ஜெலீல் உஸ்மானி அவர்கள் திறந்து வைத்த காட்சி |
திறப்புவிழாவில் கலந்து கொண்ட இஸ்லாமிய மக்கள் |
புதிய பள்ளிவளாகத்தில் துஆ ஓதப்பட்ட காட்சி |
முடிவில் இமாம் அவைகள் துஆ ஓதி வக்பு செய்தவர்கள் குடும்பத்திற்காக நன்றியும், வாழ்த்துகளும் தெரிவித்தார்கள். இதன் நினைவாக ஒரு கல்வெட்டு, பள்ளி காம்பவுண்ட் சுவரில் பதிக்கப்பட்டுள்ளது.
மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல
ரம்சான் பெருநாள் நிகழ்ச்சி அழைப்பிதழ்
18-08-2012
மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல ரம்சான் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சியின் அழைப்பிதழ் பின்வருமாறு,
மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்லம் சார்பில்
66-வது சுதந்திரதினவிழா கொடியேற்றம்
மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல பள்ளி வளாகத்தில் 15-08-2012 புதன்கிழமை, இந்திய திருநாட்டின் 66-வது சுதந்திர தினவிழா காலை 8.30 மணியளவில் முஹல்ல தலைவர் எம்.பஷீர் தேசிய கொடி ஏற்றி தொடங்கி வைத்தார்.
விழாவில் ஏராளமான முஸ்லிம் சமுதாய மக்களும், இஸ்லாமிய இளைஞர் பேரவையின் உறுப்பினர்களும், நூறுல் ஹுதா அரபி மதரசா மாணவ, மாணவிகளும், முஹல்ல நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
முஹல்ல தலைவர் சுதந்திர தினவிழா வாழ்த்துக்களை தெரிவித்து பேசினார். உப செயலாளர் நூறுல் அமீன் தேசிய ஒருமைப்பாட்டின் அவசியம், மக்களின் கடமைகள் பற்றியும் பேசினார். இறுதியில் தேசிய கீதம் பாடலுடன், வருகை தந்தோருக்கு இனிப்பு வழங்கி இனிதே முடிவடைந்தது.
மணவாளக்குறிச்சி
பாபுஜி மேல்நிலைப்பள்ளியில் சுதந்திரதின விழா
16-08-2012
மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளியில் 66-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தேசிய கொடியேற்றப்பட்டது. காலை 8.15 மணியளவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜாண் கிறிஸ்டோபர் தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா முடிவில் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அலுவலர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளும், பாபுஜி நினைவு கல்வியியல் கல்லூரி ஆசிரியர், ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.
0 Comments: