
Events
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் 3-ம் நாள் திருவிழா நிகழ்வுகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் 3-ம் நாள் திருவிழா நிகழ்வுகள்
04-03-2015
மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் 3-ம் நாள் திருவிழா நிகழ்ச்சியில் காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், பகல் 1 மணிக்கு உச்சி கால பூஜையும், மாலை 3 மணிக்கு கீழக்கரை அருள்மிகு சடையப்பர் கண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து யானை ஊர்வலம் புறப்பட்டு, உண்ணிகிருஷ்ணன் கோவில் வழியாக மண்டைக்காடு ஆலயம் வந்து சேர்ந்தது.
![]() |
யானை மீது களப பவனி வந்த காட்சி |
சமய மாநாடு பந்தல் நிகழ்ச்சியில் காலை 9 மணிக்கு திருவனந்தபுரம் வனிதா பஜனை சங்கமம் வழங்கிய கரிக்கம் பகவதி நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு மகாபாரதம் தொடர் விளக்க உரையும், பகல் 1 மணிக்கு சமய மாநாடும், மாலை 3.30 மணிக்கு குமரி மாவட்டம் கம்பன் கழகம் வழங்கிய பக்தி பட்டிமன்றமும் நடந்தது.
![]() |
அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் |

மாலை 5 மணிக்கு நாஞ்சில் மணிகண்டனின் பக்தி இன்னிசையும், 6.30 மணிக்கு ஆன்மிக உரையும், இரவு 8 மணிக்கு சமய மாநாடும், இரவு 11 மணிக்கு கேரள மாநிலம் வக்கம் நரேந்திரன் நாயர் வழங்கிய கதகளி நிகழ்ச்சியும் நடந்தது.
0 Comments: