
Manavai News
அய்யா வைகுண்டரின் 183-வது அவதாரதின விழா: மணவாளக்குறிச்சியில் பக்தர்கள் ஊர்வலமாக சுவாமிதோப்பு சென்றனர்
அய்யா வைகுண்டரின் 183-வது அவதாரதின விழா: மணவாளக்குறிச்சியில் பக்தர்கள் ஊர்வலமாக சுவாமிதோப்பு சென்றனர்
03-03-2015
குமரி மாவட்டம் சுவாமிதோப்பு பகுதியில் அமைந்துள்ளது அய்யா வைகுண்டர் திருத்தலம். இங்கு அய்யா வைகுண்டரின் 183-வது அவதாரதின விழா நாளை கொண்டாடப்படுகிறது.
இதனை தொடர்ந்து குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அய்யா வழி பக்தர்கள் ஊர்வலமாக சுவாமி தோப்புக்கு சென்று வைகுண்டரை தரிசிப்பர். அதன்படி இன்று மணவாளக்குறிச்சி அருகே உள்ள பரப்பற்று, சேரமங்கலம் அருகே உள்ள கொடித்தோட்டம், சக்கப்பத்து ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

ஊர்வலத்தில் மேளதாளங்களுடன் யானை முன்செல்ல, ஏராளமான பக்தர்கள் சென்றனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே மோர், தேநீர், உணவுகள் வழங்கப்பட்டன. ஊர்வலமாக செல்லும் பக்தர்கள் நாளை காலையில் சுவாமிதோப்பை அடைகின்றனர்.
Photos
"Puthiya Puyal" Murugan
Manavalakurichi
0 Comments: