
Announcements
மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மரணம்
மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மரணம்
27-03-2015
மணவாளக்குறிச்சி பள்ளிரோடு, கோவில்விளாகம் பகுதியை சேர்ந்தவர் சஹாப்தீன் (வயது 62). இவர் இன்று காலையில் நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்ததாக தெரிகிறது.
இவர், மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்லத்தை சார்ந்தவர்கள் மரணம் அடைந்தால், அவர்களுக்கு அடக்கத்திற்கு தேவையான குழியை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மையவாடியில் ஏற்படுத்தி வருவதில் கடமையாக இருந்து வந்தார். அதேபோல், இன்று காலையில் அதற்கான ஏற்பாட்டில் மையவாடியில் வேலை செய்து கொண்டு இருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்ததாக தெரிகிறது.
இவருடைய மரணம் மணவாளக்குறிச்சி மக்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எத்தனையோ ஆண்டுகள் மணவாளக்குறிச்சி முஹல்லவாசிகளுக்காக, உதவிபுரிந்து வந்தவரின் மரணம் மிகவும் கவலையை உருவாக்கியது. அன்னாரது நல்லடக்கம் இன்று மாலை 5 மணி அளவில் முஸ்லிம் முஹல்ல மையவாடியில் வைத்து நடைபெறுகிறது.
0 Comments: