
Events
மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
01-03-2015
மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மற்றும் 78-வது இந்து சமய மாநாடு இன்று (1-ம் தேதி) முதல் 10-ம் தேதி வரை நடக்கிறது. இன்று காலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, காலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 6 மணிக்கு பஞ்சாபிஷேகமும், 6.30 மணிக்கு தீபாராதனையும் நடந்தது.
காலை 7.30க்கு திருக்கொடியேற்று நிகழ்ச்சி துவங்கியது. கொடியேற்று நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன், முன்னாள் தமிழக அமைச்சர் கே.டி.பச்சைமால் உள்பட ஆன்மீக மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்று நிகழ்ச்சியை மண்டைக்காடு தேவசம் தந்திரி எஸ்.மகாதேவன் அய்யர் நடத்தினர்.

தொடர்ந்து மாநாடு பந்தலில் காலை 9 மணி முதல் நிகழ்ச்சிகள் துவங்கியது. மாநாடு பந்தலை திருவனந்தபுரம், ராமகிருஷ்ணா ஆசிரமம் ஸ்ரீமத் சுவாமி ஆப்தலோகா நந்தஜீ மஹராஜ் திறந்து வந்தார். பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் குத்துவிளக்கு ஏற்றி சிறப்புரையாற்றினார். மாநாட்டில் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன், இந்து அறநிலைத்துறை அமைச்சர் காமராஜ், கேரள மாநில இந்து அறநிலையத்துறை அமைச்சர் சிவக்குமார், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். வெள்ளிமலை ஸ்ரீவிவேகானந்தா ஆசிரம ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், தவத்திரு சுவாமி கருணானந்தஜி மகராஜ் ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.
0 Comments: