
Manavai News
மணவாளக்குறிச்சியில் பேரூராட்சி துணைத்தலைவர் - அ.தி.மு.க. நிர்வாகி மோதல்: போலீசார் விசாரணை
மணவாளக்குறிச்சியில் பேரூராட்சி துணைத்தலைவர் - அ.தி.மு.க. நிர்வாகி மோதல்: போலீசார் விசாரணை
03-01-2015
மணவாளக்குறிச்சி போலீஸ் சரகம் பம்மத்துமூலை பகுதியை சேர்ந்தவர் குட்டிராஜன் (வயது 40). இவர் மணவாளக்குறிச்சி பேரூராட்சி துணைத்தலைவராகவும், குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
இவருக்கும், தட்டான்விளையை சேர்ந்த அ.தி.மு.க. பேரூர் செயலாளர் கண்ணதாசன் (42) என்பவருக்கும் இடையே மணவாளக்குறிச்சியில் தட்டிபோர்டு வைப்பது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்தபிரச்சினை தொடர்பாக நேற்று இருவரும் மணவாளக்குறிச்சி சந்திப்பில் கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது இருவரும் மாறிமாறி கைகளால் தாக்கிக்கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த குட்டிராஜன் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியிலும், கண்ணதாசன் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து குட்டிராஜனும், கண்ணதாசனும் தனித்தனியாக மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Thanks to Dailythanthi
0 Comments: