
சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு கோவிலில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
மண்டைக்காடு கோவிலில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
01-03-2015
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா இன்று (1-ம் தேதி) தொடங்குகிறது. 10-ம் தேதி வரை விழா நடக்கிறது. விழாவையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
![]() |
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்த காட்சி |
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நேற்று காலையில் மண்டைக்காடு சென்றார். அவர் கோவில் பகுதி, கடற்கரைக்கு செல்லும் சாலை, லெட்சுமிபுரம் செல்லும் சாலை, மணலிவிளை செல்லும் சாலை ஆகிய முக்கிய இடங்களை பார்வையிட்டு பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். அவருடன் குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு கங்காதர், மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ், மண்டைக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலப்பன் உள்பட பலர் உடன் சென்றனர்.
![]() |
கலெக்டர் ஆய்வு செய்த காட்சி |
கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் நேற்று மாலை மண்டைக்காடு கோவிலுக்கு வந்தார். அவர் நடுவூர்க்கரை தற்காலிக பஸ்நிலையம், கோவிலை சுற்றி உள்ள பகுதி, கடற்கரை பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்பகுதியில் மின்விளக்கு வசதி, குடிநீர் வசதியை உடனடியாக செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கலெக்டருடன் உதவி போலீஸ் சூப்பிரண்டு கங்காதர், பத்மநாபபுரம் கோட்டாச்சியர் அருண்சத்யா, கல்குளம் தாசில்தார் சிந்து, குளச்சல் வருவாய் ஆய்வாளர் அருணா ஆனந்த விக்னேஸ்வரி, மண்டைக்காடு கிராம அதிகாரி தாரணி, பேரூராட்சி உதவி இயக்குனர் மாடசுவாமி, மண்டைக்காடு பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ், பத்மநாபபுரம் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், என்ஜினீயர் அய்யப்பன், கணக்கர் ராஜசேகர் உள்பட பலர் சென்றனர். பின்னர் கலெக்டர், மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப்பள்ளியில் வைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
0 Comments: