Headlines
Loading...
மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த இந்து முன்னணி தலைவர் விபத்தில் சிக்கி பலத்த காயம்

மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த இந்து முன்னணி தலைவர் விபத்தில் சிக்கி பலத்த காயம்

மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த இந்து முன்னணி தலைவர் விபத்தில் சிக்கி பலத்த காயம்
08-06-2015
மணவாளக்குறிச்சி பகுதியில் வசித்து வருபவர் மிசா சோமன் இவர் குமரி மாவட்ட இந்து முன்னணி தலைவராக உள்ளார். இந்நிலையில் இவர் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற இந்து முன்னணி மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் காரில் புறப்பட்டு சென்றார். கார் இரவு சுமார் 7.15 மணி அளவில் நாங்குநேரி நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஏற்கனவே இறந்து கிடந்த மாட்டில் மீது கார் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
சிகிட்சை பெற்றுவரும் மிசா சோமன்
இந்த விபத்தில் மிசா சோமன், கார் டிரைவர் தினேஷ், பாதுகாப்புக்கு உடன் சென்ற போலீசார் ஆகியோர் காயம் அடைந்தனர். மிசா சோமனுக்கு வலது கையில் சிதைவுடன் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த மூன்று பேரையும் நாகர்கோவிலிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் மிசா சோமனுக்கு சிதைந்திருந்த வலது கை அறுவை சிகிட்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: