
Manavai News
மணவாளக்குறிச்சி, தருவை இந்து நாடார் சமுதாய அருள்மிகு திருமுருகன் கோவில் கொடைவிழா
மணவாளக்குறிச்சி, தருவை இந்து நாடார் சமுதாய அருள்மிகு திருமுருகன் கோவில் கொடைவிழா
26-05-2015
மணவாளக்குறிச்சி, தருவை இந்து நாடார் சமுதாய அருள்மிகு திருமுருகன் கோவில் கொடைவிழா வருகிற 31 மற்றும் ஜூன் 1-ம் தேதிகளில் நடக்கிறது. முதல் நாள் விழாவில் அதிகாலை 3.15 மணிக்கு பக்தி கானம், காலை 3.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், 5.15 மணிக்கு தீபாராதனை, காலை 8 மணிக்கு பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள், பகல் 12 தீபாராதனை 1 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை, மாலை 6.30 தீபாராதனை, இரவு 7 மணிக்கு அன்னதானம், இரவு 7.30 மணிக்கு பரிசு வழங்குதல், 8 மணிக்கு பெண்கள் பங்குபெறும் “சொல்லுங்கள் வெல்லுங்கள்” நிகழ்ச்சி, 8.30 மணிக்கு ஊர்மக்கள் பங்குபெறும் மாறுவேடப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஜூன் 1-ம் தேதி விழாவில் காலை 4.30 மணிக்கு பக்தி கானம், 6.30 மணிக்கு தீபாராதனை, காலை 8.30 மணிக்கு சின்னவிளை கடலில் விசாகம் குளித்தல் மற்றும் மேளதாளம், சிங்காரி மேளத்துடன் கும்பம் எடுத்து வருதல், பகல் 12.30 மணிக்கு மாபெரும் அன்னதானம், பகல் 2.30 மணிக்கு சமய வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பண்பாட்டு போட்டிகள், மாலை 6.30 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 8.30 மணிக்கு முருகன் வழங்கும் மெகா வாய்ஸ் புதிய உதயம் திரைப்பட குழுவின் “மாபெரும் மெல்லிசை விருந்து” ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சிகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

0 Comments: