
Manavai News
மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதி மாணவி படுகாயம்
மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதி மாணவி படுகாயம்
26-05-2015
மணவாளக்குறிச்சி அருகே உள்ள சிவந்தமண் என்ற இடத்தை சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மகள் திரிஷா (வயது 10) மாணவி. சம்பவத்தன்று வின்சென்டும், திரிஷாவும் மணவாளக்குறிச்சியில் இருந்து அம்மாண்டிவிளைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சாத்தன்விளை என்ற பகுதியில் வரும் போது, எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மாணவி திரிஷா மீது மோதியது. இதில் திரிஷா படுகாயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து வின்சென்ட் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நேசையன் வழக்கு பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கடியப்பட்டணத்தை சேர்ந்த நிர்மலை (24) கைது செய்தார்.

0 Comments: