
சுற்றுவட்டார செய்திகள்
வெள்ளிச்சந்தை அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வில் சாதனை
வெள்ளிச்சந்தை அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வில் சாதனை
26-05-2015
வெள்ளிச்சந்தை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 97 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் மாணவன் அருண் 485 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இடமும், மாணவி செல்சியா 477 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடமும், கார்த்திகா 473 மதிப்பெண் பெற்று 3-வது இடமும் பிடித்துள்ளனர். மேலும், 33 மாணவர்கள் 400-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
கணிதத்தில் ஒருவரும், அறிவியலில் 9 பேரும், சமூக அறிவியலில் 8 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பத்மதாஸ், ஆசிரியர்கள் உள்பட பலர் பாராட்டினர்.

0 Comments: