
குமரிமாவட்ட செய்திகள்
ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவியேற்பு: நாகராஜா,தாணுமாலயர் கோவிலில் 1008 தேங்காய் உடைத்து அ.தி.மு.க.வினர் வழிபாடு
ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவியேற்பு: நாகராஜா,தாணுமாலயர் கோவிலில் 1008 தேங்காய் உடைத்து அ.தி.மு.க.வினர் வழிபாடு
25-05-2015
ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவி ஏற்றதைத் தொடர்ந்து நாகராஜா கோவிலிலும், சுசீந்திரம் தாணுமாலயர் கோவிலிலும் அ.தி.மு.க.வினர் 1008 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். மேலும் பட்டாசு வெடித்து, இனிப்பும் வழங்கினர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது பெங்களூரு ஐகோர்ட்டில் நடந்து வந்த மேல்முறையீடு வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தமிழக முதல்-அமைச்சராக அவர் மீண்டும் பதவி ஏற்றார். இதையொட்டி குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நடந்தது. அப்போது அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் 1008 தேங்காய்களை உடைத்து சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்தனர்.
பின்னர் ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவி ஏற்றதை கொண்டாடும் வகையில் நாகர்கோவில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பட்டாசுகளை வெடித்து, பொதுமக்களுக்கும், பஸ் பயணிகள், வாகன ஓட்டிகளுக்கும் இனிப்புகள் வழங்கினர்.
0 Comments: