Manavai News
மணவாளக்குறிச்சியில் பாரதீய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மணவாளக்குறிச்சியில் பாரதீய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
17-06-2015
மணவாளக்குறிச்சி மணல் ஆலை நிறுவன ஊழியர்களுக்கு 12-வது சம்பள ஒப்பந்தத்தை உடனே பேசி முடிக்க வேண்டும், பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மணவாளக்குறிச்சி மணல் ஆலை முன் நேற்று மாலை பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு பாரதீய மஸ்தூர் சங்க தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். செயலாளர் வேலுப்பிள்ளை, துணைப்பொருளாளர் அப்பாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் ஜெயசேகரன் வரவேற்று பேசினார். பொதுச்செயலாளர் மணிகண்டன், குருந்தன்கோடு ஒன்றிய செயலாளர் ராஜமணி, மாவட்ட அமைப்பாளர் குமாரதாஸ், பொதுச்செயலாளர் வினோத்குமார், தலைவர் தாணுமூர்த்தி, அகில பாரத பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டமைப்பின் துணைத்தலைவர் அங்குசாமி ஆகியோர் பேசினர். முடிவில் பொருளாளர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.
0 Comments: