Headlines
Loading...
நாகர்கோவிலில் ஆட்டோ–வேன் மோதல் பள்ளிக்கூட மாணவன்–மாணவி பலி

நாகர்கோவிலில் ஆட்டோ–வேன் மோதல் பள்ளிக்கூட மாணவன்–மாணவி பலி

நாகர்கோவிலில் ஆட்டோ–வேன் மோதல் பள்ளிக்கூட மாணவன்–மாணவி பலி
17-06-2015
நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இருந்து நேற்று மாலை மாணவ–மாணவிகள் 10 பேரை ஏற்றிக்கொண்டு ஒரு ஆட்டோ புத்தேரி நோக்கி புறப்பட்டது. புத்தேரி ரெயில்வே மேம்பாலத்தில் ஆட்டோ சென்றபோது எதிரே வந்த வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 2 வாகனங்களும் நொறுங்கின.
கிருத்திகா
ஆட்டோ டிரைவர் ரமேஷ் (வயது 36) மற்றும் மாணவ–மாணவிகள் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள், ரத்தம் வழிந்த பள்ளிக்குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர்களில் கிருத்திகா (6), தனுஷ் (7) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

விபத்து நடந்ததும் வேன் டிரைவர் வெட்டூர்ணிமடம் ரமேஷ்குமார் தப்பி ஓடி வடசேரி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும் மாணவ–மாணவிகளை பார்வையிட்டனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: