
Manavai News
மணவாளக்குறிச்சி தருவை திருமுருகன் கோவில் விழா: அன்னதான நிகழ்ச்சியை எம்.ஆர்.காந்தி துவங்கி வைத்தார்
மணவாளக்குறிச்சி தருவை திருமுருகன் கோவில் விழா: அன்னதான நிகழ்ச்சியை எம்.ஆர்.காந்தி துவங்கி வைத்தார்
03-06-2015
மணவாளக்குறிச்சி அருகே உள்ள தருவை திருமுருகன் திருக்கோவில் கொடை விழா சென்ற மாதம் 31 மற்றும் இந்த மாதம் 1-ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. 2-ம் நாள் நிகழ்ச்சியில் காலை 8.30 மணிக்கு சின்னவிளை கடலில் விசாகம் குளித்தல் மற்றும் மேளதாளம், சிங்காரி மேளத்துடன் கும்பம் எடுத்து கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குமரி மாவட்ட பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி கலந்து கொண்டார். ஊர் தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஹரிகரன் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து காலை 11.30 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. மதியம் 2.30 மணிக்கு மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி துவக்கி வைத்தார். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். மாலையில் சமய வகுப்பு மாணவ, மாணவியரின் போட்டிகளும், இரவில் மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
செய்தி மற்றும் போட்டோஸ்
“புதிய புயல்” முருகன்
மணவாளக்குறிச்சி

0 Comments: