
சுற்றுவட்டார செய்திகள்
மணவாளக்குறிச்சி அருகே லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு: 2 பேர் கைது
மணவாளக்குறிச்சி அருகே லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு: 2 பேர் கைது
02-06-2015
மணவாளக்குறிச்சி அருகே உள்ள சேரமங்கலம் இலுப்பை தோப்பை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 33). லாரி டிரைவர். இவரது சகோதரி ராஜேஸ்வரி திருமணம் சில வருடங்களுக்கு முன் நடந்தது. இதற்காக வசந்தகுமார் செலவு செய்தார். செலவுதொகைக்காக தனது தாயார் சரஸ்வதியிடம் (52) சொத்தை எழுதி வாங்கிக்கொண்டார்.
இதனால் சரஸ்வதிக்கும், வசந்தகுமாருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று சரஸ்வதி, இவரது மற்றொரு மகன் சேகர்(28), கண்டன்விளையை சேர்ந்த ராஜக்கண்(29) ஆகிய 3 பேரும் சேர்ந்து வசந்தகுமாரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த வசந்தகுமார் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ், சப்–இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வழக்கு பதிவு செய்து சரஸ்வதியையும், ராஜக்கண்னையும் கைது செய்தனர். சேகரை போலீசார் தேடிவருகிறர்கள்.

0 Comments: