
Manavai News
மணவாளக்குறிச்சி, ஆசாரிதெரு மாணவி சந்தியா 10-ம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் 3-ம் இடம் பிடித்து சாதனை
மணவாளக்குறிச்சி, ஆசாரிதெரு மாணவி சந்தியா 10-ம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் 3-ம் இடம் பிடித்து சாதனை
21-05-2015
மணவாளக்குறிச்சி ஆசாரிதெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் சந்தியா. இவர் மண்டைக்காடு புதூரில் உள்ள மரிய ரபோல்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் 10-ம் வகுப்பு தேர்வில் 497/500 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 3-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தனர்.
![]() |
மாணவி சந்தியாவிற்கு இனிப்பு வழங்கிய பள்ளி தலைமையாசிரியர். அருகில் மாணவியின் பெற்றோர் |
இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் தமிழ்-99, ஆங்கிலம்-98, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100. தேர்வில் சாதனை படைத்த மாணவி சந்தியாவை பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர்.
0 Comments: