
Manavai News
மணவாளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வில் சாதனை
மணவாளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வில் சாதனை
21-05-2015
மணவாளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்தனர். மாணவி ஆக்னஸ் எமெல்டா 484/500 மதிப்பெண் பெற்று பள்ளியின் முதல் இடத்தை பிடித்தார். இவர் பெற்ற மதிப்பெண் தமிழ்-91, ஆங்கிலம்-95, கணிதம்-99, அறிவியல்-100, சமூக அறிவியல்-99.
![]() |
மாணவிகள் ஆக்னஸ் எமெல்டா, சுஸ்மா, அஸ்மிதா |
மாணவி சுஸ்மா 482/500 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தை பிடித்தார். மாணவி பெற்ற மதிப்பெண் தமிழ்-96, ஆங்கிலம்-88, கணிதம்-100, அறிவியல்-99, சமூக அறிவியல்-99. மாணவி அஸ்மிதா 476/500 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தை பெற்றார். மாணவி பெற்ற மதிப்பெண் தமிழ்-98, ஆங்கிலம்-83, கணிதம்-99, அறிவியல்-96, சமூக அறிவியல்-100. 70 மாணவிகள் தேர்வு எழுதியதில் 69 பேர் தேர்ச்சி பெற்றனர்.
15 மாணவிகள் 450 க்கு மேல் மதிப்பெண்களும் 40 பேர் 400 க்கு மேல் மதிப்பெண்ணும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர் மேசியா தாஸ், உதவி தலைமையாசிரியர் எல்வி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
0 Comments: