Manavai News
மணவாளக்குறிச்சியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு: போக்குவரத்து பாதிப்பு
மணவாளக்குறிச்சியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு: போக்குவரத்து பாதிப்பு
15-06-2015
குமரி கடலோர கிராமங்களுக்கு சுனாமி கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக குழித்துறையில் இருந்து திக்கணங்கோடு, திங்கள் நகர், மணவாளக்குறிச்சி ராஜாக்கமங்கலம் வழியாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி வரை ராட்சத குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ராட்சத குழாய்களின் பணிகளை குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்வதும், அதை சீரமைக்கும் பணி நடைபெறுவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் நேற்று காலை மணவாளக்குறிச்சி அருகே உள்ள பிள்ளையார் கோவில் சந்திப்பில் இருந்து திங்கள்நகர் செல்லும் சாலையில் திடீரென ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் பீறிட்டு பாய்ந்து ரோட்டில் ஆறாக ஓடியது. இதனால் அந்த பகுதி முழுவதும் சேரும், சகதியுமாக காணப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக செல்லும் பஸ்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.
0 Comments: