District News
குமரி மாவட்ட கடற்கரையில் 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது
குமரி மாவட்ட கடற்கரையில் 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது
15-06-2015
கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழக மேற்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதும் (கன்னியாகுமரி முதல் நீரோடி வரை) ஒவ்வொரு ஆண்டிலும் ஜூன் 15–ம் தேதி முதல் ஜூலை 29–ந் தேதி முடிய 45 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவலைப் படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிப்பதை தடை செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
கடலில் மீன்கள் இனவிருத்திக்கு ஏற்ற காலமான மேற்கண்ட 45 நாட்கள் மீனவர்கள் கடலில் மீன்பிடிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலம் இடையூறு இல்லாத இனவிருத்தி மேம்பட்டு, மீன்வளம் பெருக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் நலன் கருதி அரசு ஆணையிட்டுள்ளது.
அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களுடைய வலைகளை சீரமைத்தல், விசை படகுகளை சீரமைத்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் விசைபடகுகள், இழுவலை படகுகள் குளச்சல் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது.
0 Comments: