சுற்றுவட்டார செய்திகள்
மணவாளக்குறிச்சி அருகே பாக்கு வெட்டிய போது கத்தி வயிற்றில் பாய்ந்து முதியவர் பலி
மணவாளக்குறிச்சி அருகே பாக்கு வெட்டிய போது கத்தி வயிற்றில் பாய்ந்து முதியவர் பலி
15-06-2015
மனவாளக்குறிச்சியை அடுத்த முட்டம், நடு முட்டம் பகுதியை சேர்ந்தவர் லூர்தையா (வயது 70). முதியவரான இவர் சம்பவத்தன்று வெற்றிலை போடுவதற்காக பாக்கு வெட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது தவறுதலாக கத்தி வயிற்றில் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்த லூர்தையாவை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments: