Headlines
Loading...
பாஸ்போர்ட் பெற விதிமுறைகள் தளர்வு

பாஸ்போர்ட் பெற விதிமுறைகள் தளர்வு

பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில்,
  • கடந்த 21.01.1989 க்கு பிறகு பிறந்தவர்கள், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது, பிறப்பு சான்றிதழ் கட்டாயம் வழங்க வேண்டும் என்ற விதி தளர்த்தப்படுகிறது. அவர்கள், பிறந்த தேதியுடன் கூடிய கடைசியாக படித்த கல்வி நிறுவனங்கள் வழங்கும் மாற்று சான்றிதழ், பான்கார்டு எண், ஆதார் கார்டு எண், டிரைவிங் லைசென்ஸ், தேர்தல் அடையாள அட்டை, பொது காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கிய, காப்பீடு ஆவணம் ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம்.
  • அரசு பணியில் உள்ளவர்கள் பணி ஆவணம், பென்சன் உத்தரவு ஆவணம் ஆகியவற்றில் ஒன்றை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பம் செய்பவர்கள், இனிமேல் தந்தை அல்லது தாயார் அல்லது பாதுகாவலர்கள் யாராவது ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டால்மட்டும் போதும்.
  • பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்பவர்கள் நோட்டரி பப்ளிக், முதல் நிலை ஜூடிசியல் மாஸ்திரேட் போன்றவர்களிடம் அத்தாட்சி கையெழுத்து வாங்க தேவையில்லை. சுய சான்றிதழ் மட்டும் அளித்தால் போதும்.
  • திருமணமானவர்கள், திருமண சான்றிதழ் அளிக்க வேண்டிய கட்டாயமில்லை.
  • பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது கணவன்/ மனைவி பெயர்களை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.
  • பிறந்த தேதி தெரியாமல் காப்பகங்களில் வளர்ந்தவர்கள், தங்களது காப்பக தலைவரிடம் சான்று வாங்கி சமர்ப்பித்தால் போதும்.
  • உள்நாட்டில் தத்தெடுத்தவர்களுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது, உறுதிமொழி அளித்து ஆவணம் வழங்கினால் போதும்.
  • உயர் அதிகாரிகளிடம் ஐடன்டி சர்டிபிகேட் வாங்க முடியாத அரசு ஊழியர்கள், அவசர தேவைக்காக உயரதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து சுய சான்றிதழ் அளித்தால் போதும். 
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: