Surrounded Area
கிறிஸ்துமஸ் கொண்டாட ஊர் திரும்பும் மீனவர்கள்
டிசம்பர் 25-ம்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. குமரி கடலோர கிராமங்களிலும் இந்த பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
குமரி மீனவர்கள் சொந்த ஊரில் மீன் பிடிப்பது மட்டுமின்றி கேரள, கர்நாடகா, மகராஷ்டிரா, குஜராத் ஆகிய கடல் பகுதியிலும் தங்கி மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் பண்டிகை காலங்கள், ஊர் திருவிழா மற்றும் மீன்பிடி தடைகாலங்கள் ஆகிய நாட்களில் ஊர் திரும்புவது வழக்கம்.கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அதை கொண்டாட கிறிஸ்தவர்கள் தயாராகி வருகின்றனர்.
கேரள, கர்நாடகா, மகராஷ்டிரா, குஜராத் ஆகிய கடல் பகுதியில் தொழிலுக்கு சென்ற சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை தங்கள் குடும்பத்துடன் கொண்டாட ஊர் திரும்பிய வண்ணம் உள்ளனர். இதனால் குமரி கடற்கரை கிராமங்கள், முக்கிய கடை வீதிகள் களைக்கட்டி உள்ளன.
0 Comments: