
Manavai News
ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்பு: மணவாளக்குறிச்சியில் அதிமுகவினர் கொண்டாட்டம்
ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்பு: மணவாளக்குறிச்சியில் அதிமுகவினர் கொண்டாட்டம்
23-05-2015
தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்றதை தொடர்ந்து மணவாளக்குறிச்சி பகுதியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
![]() |
மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா இனிப்பு வழங்கிய காட்சி |
இன்று காலை 11 மணி அளவில் தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கில் பதவியேற்றார். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா கலந்து கொண்டு தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் இராஜசேகர், பேரூர் செயலாளர் கண்ணதாசன், துணை செயலாளர் காமராஜ், குமார், ரவி, ஐயப்பன் உள்பட அதிமுகவினர் திரளாக பங்கேற்றனர்.
0 Comments: