
Manavai News
மணவாளக்குறிச்சியில் இன்று ஆட்டோக்கள் ஓடவில்லை
மணவாளக்குறிச்சியில் இன்று ஆட்டோக்கள் ஓடவில்லை
30-04-2015
மணவாளக்குறிச்சி உள்பட குமரி மாவட்டம் முழுவதும் மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா 2015 சட்டத்தை கைவிடக்கோரி ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் மாவட்டம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஆட்டோக்கள் ஓடவில்லை.
![]() |
மணவாளக்குறிச்சி ஆட்டோ ஸ்டாண்ட், ஒருசில ஆட்டோக்கள் திருப்பிவிடபட்டிருந்தது |
குமரி மாவட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் இன்று காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா சட்டத்தை கைவிடக்கோரியும், குமரி மாவட்ட தன்மைக்கேற்ப ஆட்டோ மீட்டர் கட்டணம் பேசி முடிவெடுக்க வேண்டியும், டிஜிட்டர் மீட்டர் வழங்கிட வேண்டியும் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தனர்.
மணவாளக்குறிச்சி பகுதியில் ஆட்டோக்கள் இன்று ஓடாத காரணத்தால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஆட்டோ ஸ்டாண்ட் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. அதே வேளையில் பெரும்பாலான வாடகை கார்களும் ஓடாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
0 Comments: