
Manavai News
மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
07-05-2015
மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளியில் 2014-15-ம் ஆண்டு நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில் 317 மாணவ, மாணவிகள் எழுதியதில் 317 பேரும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத தேர்ச்சியாகும். இப்பள்ளி சென்ற மூன்று ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. சென்ற கல்வியாண்டில் மாவட்டத்தின் சிறந்த சராசரியாகிய 938.15 பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கல்வி ஆண்டில் 11 மாணவர்கள் கணிதத்தில் 200/200 மதிப்பெண்ணும், வேதியியலில் 3 மாணவர்கள் 200/200 மதிப்பெண்களும் பெற்றுள்ளது.
![]() |
சிவரஞ்சனி, சச்சின், விக்டோ ஜெர்சி |
மாணவி சிவரஞ்சனி 1168 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றார். அவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு, தமிழ்-181, ஆங்கிலம்-191, இயற்பியல்-197, வேதியியல்-200, கணினி அறிவியல்-199, கணிதம்-200.
சச்சின் என்ற மாணவர் 1142 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றார். இவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு, தமிழ்-191, ஆங்கிலம்-175, இயற்பியல்-196, வேதியியல்-196, உயிரியல்-190, கணிதம்-194. விக்டோ ஜெர்சி என்ற மாணவி 1130 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். இப்பள்ளியில் 108 பேர் 1000க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றனர்.
தேர்ச்சி பெற்றவர்களை பள்ளி நிர்வாக அதிகாரி நசரேத் சார்லஸ், இயக்குநர் ஜாண்சன், தலைமையாசிரியர் கிறிஸ்டோபர், ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
வாழ்த்துக்கள் தொடர்ந்து வெற்றிவாகை சூட்டிட!
ReplyDelete