Manavai News
மணவாளக்குறிச்சி கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி
மணவாளக்குறிச்சி கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி
28-05-2014
மணவாளக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிமிடெட் (ஒய்.92) சார்பில் மணவாளக்குறிச்சி பகுதியிலுள்ள மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.
கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.பஷீர் உசேன் 14 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூபாய் 32 இலட்சம் கடனாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.பஷீர் உசேன் தலைமை தாங்கி தலைமையுரை வழங்கினார்.
வங்கி துணைத்தலைவர் சி.கிருஷ்ணன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.
0 Comments: